ADDED : ஏப் 02, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர்,
சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி, 46. சித்தாலப்பாக்கத்தில் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, மாடம்பாக்கம் சாலை வழியாக, 'யமஹா' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார்.
கோவிலாஞ்சேரி சந்திப்பு அருகே வந்த போது, தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த டாரஸ் லாரி மோதியது.
இதில், தலை நசுங்கி பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து பயந்துபோன லாரி ஓட்டுனர், வாகனத்தை அங்கேயே விட்டு தப்பினார்.
போலீசார் விரைந்து, பாலாஜியின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த விபத்து குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.