/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பயோ சி.என்.ஜி., - வேஸ்ட் டூ எனர்ஜி' விரைவில் செயல்படும்: மேயர் பிரியா
/
'பயோ சி.என்.ஜி., - வேஸ்ட் டூ எனர்ஜி' விரைவில் செயல்படும்: மேயர் பிரியா
'பயோ சி.என்.ஜி., - வேஸ்ட் டூ எனர்ஜி' விரைவில் செயல்படும்: மேயர் பிரியா
'பயோ சி.என்.ஜி., - வேஸ்ட் டூ எனர்ஜி' விரைவில் செயல்படும்: மேயர் பிரியா
ADDED : மே 02, 2025 12:18 AM
சென்னை, உழைப்பாளர்கள் தினத்தையொட்டி, துாய்மை பணியாளர்கள் மற்றும் மலேரியா பணியாளர்களை பாராட்டி, சென்னை மாநகராட்சி 'அம்மா' மாளிகை அரங்கத்தில், மேயர் பிரியா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின், மேயர் பிரியா அளித்த பேட்டி:
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு 'தாட்கோ' வங்கி வாயிலாக, பிரத்யேக அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, துாய்மை பணியாளர்கள், பணியின்போது உயிரிழந்தால் வழங்கப்படும் தொகை, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது.
மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் மட்டுமல்லாமல், தனியார் துறையில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களும், இதனால் பயன் பெறுவர். இதற்காக மண்டல வாரியாக உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது, 11,000 துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
முதல்வர் அறிவுறுத்தல்படி, 'பயோ சி.என்.ஜி., - வேஸ்ட் டூ எனர்ஜி' திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். அதாவது, குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் காஸ் தயாரித்து உபயோகப்படுத்தப்படும்.
இதன் வாயிலாக குப்பை தேக்கம் குறைவதுடன், அங்கு உருவாகும் நச்சு வாயுக்கள் வெளியே வராத வகையில், கொடுங்கையூரில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், துாய்மை பணியாளர்களுடன் சேர்ந்து, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர், மட்டன் பிரியாணி சாப்பிட்டனர்.