/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முனையத்தில் கூடு கட்டும் பறவைகள் ஏர்போர்ட் பாதுகாப்பில் கேள்விக்குறி
/
முனையத்தில் கூடு கட்டும் பறவைகள் ஏர்போர்ட் பாதுகாப்பில் கேள்விக்குறி
முனையத்தில் கூடு கட்டும் பறவைகள் ஏர்போர்ட் பாதுகாப்பில் கேள்விக்குறி
முனையத்தில் கூடு கட்டும் பறவைகள் ஏர்போர்ட் பாதுகாப்பில் கேள்விக்குறி
UPDATED : ஆக 01, 2025 09:51 AM
ADDED : ஆக 01, 2025 12:47 AM

சென்னை, சென்னை விமான நிலையத்தில் உள்ள முனையங்களில், முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படாததால், பறவைகள் கூடு கட்டி வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடு பயணத்துக்கு, மூன்று முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.
பொதுவாக, விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில், உயரமான மரங்கள் இருந்தால் உணவு தேடி சுற்றிவரும் பறவைகள், எளிதில் அடைக்கலம் புகுந்துவிடும். அங்கேயே கூடு அமைக்கும்.
விமானம் பறக்கும் போதும், தரையிறங்கும் போதும் பறவைகள் மோதினால் பெரிய அசம்பாவிதம் நடக்கலாம். இது போன்று, பல சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
விமான ஓடுபாதை பகுதியில் பறவைகளை விரட்ட ஆட்கள் நியமிக்கப்பட்டு இருப்பர். இப்படி பாதுகாப்பாக கவனித்து கொண்டாலும், சென்னை விமான நிலையத்தை சுற்றி அமைந்துள்ள கொளப்பாக்கம், கவுல்பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில், குப்பை கழிவு கொட்டும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை விமான நிலைய உள்நாட்டு வருகை முனையமான, 'டி1' முனையத்தின் மேற்பறப்பில், காகம் கூடு கட்டி உள்ளது. பயணியர் வந்து செல்லும் போது, அவை பறந்து செல்கின்றன.
Advertisement
இதை பார்க்கும் ஊழியர்கள் சிலர், அவற்றை விரட்டுகின்றனர். முனையங்களில் போதுமான பராமரிப்பு இல்லாததே இந்நிலைக்கு காரணம் என, பயணியர் குற்றம் சாட்டியுள்ளனர். விமான நிலைய அதிகாரிகள், பராமரிப்பு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

