/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமற்ற தடுப்பணையால் விவசாயிகள் பாதிப்பு: அரசுக்கு பா.ஜ. கண்டனம்
/
தரமற்ற தடுப்பணையால் விவசாயிகள் பாதிப்பு: அரசுக்கு பா.ஜ. கண்டனம்
தரமற்ற தடுப்பணையால் விவசாயிகள் பாதிப்பு: அரசுக்கு பா.ஜ. கண்டனம்
தரமற்ற தடுப்பணையால் விவசாயிகள் பாதிப்பு: அரசுக்கு பா.ஜ. கண்டனம்
ADDED : ஆக 08, 2025 10:17 AM
சென்னை: 'திருச்சி கொள்ளிடம் ஆற்றில், தரமற்ற முறையில் தடுப்பணை கட்டியது மட்டுமின்றி, ஊருக்கே படியளக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுத்து, அவர்களின் வயிற்றில் அடிக்கிறது, தி.மு.க., அரசு' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருச்சி மாவட்டம், அழகிரிபுரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில், கடந்த ஆண்டு 7 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தடுப்பணை சேதம் அடைந்ததை சீர் செய்யாமல், தி.மு.க., அரசு அலட்சியப்படுத்துகிறது. இதனால், பாசனத்திற்கு பயன்பட வேண்டிய மழை நீர், வீணாக கடலில் கலப்பதாகக் கூறி, அப்பகுதி விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராடுவது, மனதை கனக்க வைக்கிறது.
தரமற்ற முறையில் தடுப்பணையை கட்டியதுடன், ஊருக்கே படியளக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுத்து, அவர்களின் வயிற்றில் அடிக்கிறது, தி.மு.க., அரசு. ஏற்கனவே, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாலும், பயிர்கள் கருகுவதாலும் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை, தி.மு.க., அரசு தொடர்ந்து புறக்கணிப்பது முறையல்ல.
எனவே, அழகிரிபுரம் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு, தடுப்பணைகள் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்துவதற்கும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை, முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

