/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமைச்சர் பொன்முடி மீது பா.ஜ., கவுன்சிலர் புகார்
/
அமைச்சர் பொன்முடி மீது பா.ஜ., கவுன்சிலர் புகார்
ADDED : ஏப் 20, 2025 12:09 AM
சென்னை,
அமைச்சர் பொன்முடி சில நாட்களுக்கு முன் பெண்கள் குறித்து பேசியது, சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன், தமிழக டி.ஜி.பி., அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், 'அமைச்சர் பொன்முடி மீது பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

