/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ஜ., கவுன்சிலர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
பா.ஜ., கவுன்சிலர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : செப் 20, 2025 01:16 AM
சென்னை, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் லியோ சுந்தரம் , பா.ஜ.,வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
சென்னை மாநகராட்சி, 198வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் லியோ சுந்தரம். இவர், ஆரம்பத்தில் அ.தி.மு.க.,வில் இருந்தார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2022ல், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியில் இணைந்தார். தற்போது அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், பா.ஜ.,வில் இருந்து விலகிய லியோ சுந்தரம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.