/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி முகாமில் பா.ஜ., - தி.மு.க., தள்ளுமுள்ளு மண்டல அதிகாரிகள் மீது அதிருப்தி

ADDED : நவ 05, 2025 01:24 AM

அம்பத்துார்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி முகாமில், பா.ஜ., - தி.மு.க.,வினரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சலசலப்பை ஏற்படுத்தியது.
அம்பத்துார் மண்டலத்திற்கு உட்பட்ட வாக்காளர்களுக்கான, எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி முகாம், அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
அம்பத்துார் மண்டல அலுவலர் பிரபாகரன் தலைமையில் நடந்த முகாமில், தி.மு.க., - கம்யூ., - பா.ஜ., - வி.சி., உட்பட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், பா.ஜ., சார்பில் 'ஆதார்' அடையாள அட்டையை ஆவணமாக கருதி, அதையும் சான்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், ஆதார் அடையாள அட்டையுடன், ஏதாவது ஒரு குடியுரிமை சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறினர். இதனிடையே, பா.ஜ., மற்றும் தி.மு.க.,வினர் மாறி, மாறி கேள்விகளை கேட்டனர்.
இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டு, இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அம்பத்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல், தி.மு.க., மண்டலக்குழு தலைவர் மூர்த்தி ஆகியோர் தலையிட்டு, சமரசம் செய்ய முயன்றனர்.
ஆனால், அதிகாரிகள், தங்களை கேள்வி கேட்க விடாமல் தடுத்து, மைக்கை பறித்து, அராஜகம் செய்வதாக கூறி பா.ஜ.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மண்டல அதிகாரிகள் முறையாக ஏற்பாடு செய்யாமல், அவசரகதியில் எஸ்.ஐ.ஆர்., முகாமை நடத்தியுள்ளனர்.
எஸ்.ஐ.ஆர்., முகாமில், அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் நிலையில், மண்டல அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல், பாதுகாப்பு கோராமல் தன்னிச்சையாக கூட்டத்தை நடத்தி முடிக்க முயன்றுள்ளனர்.
இதனால் தான் சலசலப்பு ஏற்பட்டதாக, கூட்டத்தில் பங்கேற்ற பிற கட்சியினர் குற்றம் சாட்டினர்.