/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டு சுவரில் பயங்கரவாதிகளின் குறியீடு பா.ஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி புகார்

ADDED : நவ 14, 2025 03:12 AM

சென்னை: 'எங்கள் வீட்டுச்சுவரில் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ரகசிய குறியீடுகளை வரைந்தவர்கள், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும்' என, பா.ஜ., தமிழக செயலர் அமர்பிரசாத் ரெட்டி டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
என் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் உள்ளன.
இதுபற்றி என் தாய் இந்திரா, கடந்த ஆண்டு, ஜன.,6ல், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். விசாரணை நடந்தது. ஆனால், காரணம் கண்டறியப்படவில்லை.
சில நாட்களுக்கு முன் எங்கள் வீட்டு ச்சுவரில், சில சந்தேக குறியீடுகள் வரையப்பட்டு இருந்தன. ஏதோ கிறுக்கல் என்று கருதினோம். ஆனால், அது பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ரகசிய குறியீடுகள் என்பது தெரியவந்துள்ளது.
அது அரபு மொழியில் இருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் எங்கள் வீட்டிற்கு, மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண் டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
இச்சம்பவம், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
எனக்கும், எங்கள் குடும்பத்தினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.