/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டு உரிமையாளரின் மகனை வெட்டிய வாடகைதாரர் கைது
/
வீட்டு உரிமையாளரின் மகனை வெட்டிய வாடகைதாரர் கைது
வீட்டு உரிமையாளரின் மகனை வெட்டிய வாடகைதாரர் கைது
வீட்டு உரிமையாளரின் மகனை வெட்டிய வாடகைதாரர் கைது
ADDED : நவ 14, 2025 03:13 AM
விருகம்பாக்கம்: சாலிகிராமம், காந்தி நகரைச் சே ர்ந்தவர் கணேஷ் கோபால், 45. இவருக்கு சொந்தமான வீடுகளை, குத்தகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு வாடகைதாரரான பாஸ்கரன், 37, தினமும் மது அருந்தி தொல்லை கொடுத்துள்ளார்.
கடந்த 11ல் பாஸ்கரன் தங்கியிருந்த வீட்டின் குத்தகைப்பணம் 6 லட்சம் ரூபாயை தந்து, வீட்டை காலி செய்ய, கணேஷ் கோபால் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் பாஸ்கரன் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து, 'பணம் அளிக்கவில்லை' எனக் கூறியுள்ளனர். இதில், இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் கணேஷ் கோபால் வெளியே சென்ற போது, பாஸ்கரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, கணேஷ் கோபாலின் 13 வயது மகனின் முதுகில் வெட்டியுள்ளார்.
விருகம்பாக்கம் போலீசார், பாஸ்கரனை நேற்று கைது செய்தனர்.

