/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன் செத்து மிதந்ததற்கு கழிவுநீர் கலப்பால் உருவான நீலபச்சை பாசிதான் காரணம் * பல்கலை ஆய்வில் அதிர்ச்சி தகவல்
/
மீன் செத்து மிதந்ததற்கு கழிவுநீர் கலப்பால் உருவான நீலபச்சை பாசிதான் காரணம் * பல்கலை ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மீன் செத்து மிதந்ததற்கு கழிவுநீர் கலப்பால் உருவான நீலபச்சை பாசிதான் காரணம் * பல்கலை ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மீன் செத்து மிதந்ததற்கு கழிவுநீர் கலப்பால் உருவான நீலபச்சை பாசிதான் காரணம் * பல்கலை ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ADDED : மார் 19, 2025 12:22 AM

ஆவடி, ஆவடி பெரியார் நகரில் உள்ள பருத்திப்பட்டு ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில் இரண்டு வாரமாக மீன் செத்து மிதப்பது தொடர்கிறது.
இதுவரை செத்து மிதந்த 12,000 கிலோ கிலோ மீன் அகற்றி புதைக்கப்பட்டு உள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்புதான் மீன் இறப்புக்கு காரணம் என சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து, மீன்வளத்துறையினர் இம்மாதம் 8ம் தேதி ஆய்வு செய்தனர். முடிவு இன்னும் வெளியாகவில்லை. மீன்வளத்துறை அறிவுரைப்படி ஏரியில், 2,000 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, சென்னை பல்கலை சார்பில், தாவரவியல் துறை முனைவர் ஸ்ரீனிவாசன், ஏரியில் நீர் மாதிரியை நேற்று முன்தினம் ஆய்வுக்கு எடுத்து சென்றார்.
அதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், கழிவுநீர் கலப்பால் நீல பச்சை பாசி உருவானதால், மீன் இறந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆய்வு முடிவு விவரங்கள்:
நீரில், 'அனாபெனாப்சிஸ் எலென்கினி மில்லர்' என்ற நுண்ணியிரியான நீல பச்சை பாசி இருப்பது உறுதியாகி உள்ளது. இவை, மீன், நீர்வாழ் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு, 'சயனோ டாக்சின்' எனும் நச்சு தன்மையை வெளிப்படுத்தும்.
வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில், இந்த நுண்ணுயிரி உருவாகிறது. நீரில் விரைவாக படர்ந்து, ஒரே நாளில் முழு ஏரியையும் மூடும் ஆற்றல் உடையது.
ஏரி நீரை ஆய்வு செய்ததில், லிட்டர் நீரில், 1.20 கோடி நுண்ணயிரி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த நுண்ணுரி, நீரில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சிவிடும். இதனால், மீன் சுவாசத்துக்கான ஆக்சிஜன் கிடைக்காமல், மூச்சு திணறல் ஏற்பட்டு, மீன் செத்து மிதந்துள்ளது. இந்த மீனை சாப்பிடுவர்களுக்கு, நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு இறக்க நேரிடும்.
எனவே, நீர்நிலைகளில் நேரடியாக கழிவுநீர் கலக்காமல் தடுக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலக்கவில்லை என, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்த நிலையில், ஆய்வு முடிவில் கழிவுநீர் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
***
நல்ல வேலையாக
யாரும் சாப்பிடலை!
''பொதுவாக இறந்த மீனை நாம் சாப்பிடுவதில்லை; நீர்நிலைகளில் பிடித்து, தேவைக்கேற்ப பதப்படுத்தி சாப்பிடுகிறோம். பருத்திப்பட்டு ஏரி மீனை யாரும் சாப்பிடவில்லை.
ஒரு வேலை பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த மீனை யாராவது விற்பனைக்கு கொண்டு சென்றிருந்தால், மருத்துவமனைகள் நிரம்பி வழிந்திருக்கும்.
இத்தகைய மீனை சாப்பிடுவோருக்கு, வயிற்றுப்போக்கு, வாந்திபேதி, பக்கவாதம், மூளை நரம்பு பாதிப்பு மட்டுமின்றி, உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இனியாவது, இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கிளஞ்சல் சுண்ணாம்பு கொட்டுவது நல்ல முயற்சி; ஆனால், 2,000 கிலோ போதாது.
- ஸ்ரீனிவாசன்,
முனைவர், தாவரவியல்துறை,
சென்னை பல்கலை.