/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது மின் கேபிளை பழுதாக்கதீர் வாரிய தலைவர் வேண்டுகோள்
/
பொது மின் கேபிளை பழுதாக்கதீர் வாரிய தலைவர் வேண்டுகோள்
பொது மின் கேபிளை பழுதாக்கதீர் வாரிய தலைவர் வேண்டுகோள்
பொது மின் கேபிளை பழுதாக்கதீர் வாரிய தலைவர் வேண்டுகோள்
ADDED : மே 10, 2025 12:35 AM
சென்னை, சென்னை மற்றும் புறநகரில், சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ ரயில், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம், தனியார் ஒப்பந்ததாரர்கள், தங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது, மின் வாரியத்தின் மின் கேபிள்களை பழுதாக்கி விடுகின்றனர். இதனால், மின் தடை ஏற்படுகிறது.
இதை கருத்தில் வைத்து ராதாகிருஷ்ணன் தலைமையில், பல துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம், சென்னையில் நடந்தது.
அதில், துறை அதிகாரிகளிடம், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
இனி வரும் காலங்களில் சாலையில் பள்ளம் தோண்டும் பணிகளை மேற்கொள்ளும்போது, மின் கேபிள்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்.
சாலையில் பணிகளை துவங்கும் முன் கேபிள் செல்லும் வரைபடங்களை, மின் வாரியத்திடம் இருந்து பெற்று, அதற்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலையில் பணிகளை மேற்கொள்ளும் போது, கேபிள் இருந்தால் உடனே பணிகளை நிறுத்தி, அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் கேபிள் தொடர்பான தகவலை பெற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியதாக, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

