/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடல் அலையில் சிக்கி மாயமான 2 சிறுவர்களின் உடல்கள் மீட்பு
/
கடல் அலையில் சிக்கி மாயமான 2 சிறுவர்களின் உடல்கள் மீட்பு
கடல் அலையில் சிக்கி மாயமான 2 சிறுவர்களின் உடல்கள் மீட்பு
கடல் அலையில் சிக்கி மாயமான 2 சிறுவர்களின் உடல்கள் மீட்பு
ADDED : செப் 29, 2025 12:59 AM

சென்னை:கடல் அலையில் சிக்கி மாயமான இரண்டு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மணலி, சி.பி.சி.எல்., நகரைச் சேர்ந்தவர் தருண்குமார், 17; பிளஸ் 2 மாணவர். இவரது நண்பர் இம்மானுவேல், 16; பிளஸ் 1 மாணவர்.
காலாண்டு விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் காலை இவர்கள், நண்பர்கள் 16 பேருடன் சேர்ந்து, எண்ணுார், பாரதியார் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அனைவரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது, அலையில் சிக்கி தருண்குமார் மற்றும் இம்மானுவேல் மாயமாகினர். தகவலறிந்து வந்த எண்ணுார் போலீசார், எண்ணுார், மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நள்ளிரவு தருண்குமாரின் உடலும், அதிகாலையில் இம்மானுவேலின் உடலும், அதே பகுதியில் கரை ஒதுங்கின.
எண்ணுார் போலீசார், சிறுவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.