ADDED : ஜன 23, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மடிப்பாக்கம், மடிப்பாக்கம், அய்யப்பா நகர் ஏரியில், நேற்று முன்தினம் மாலை 7:00 மணியளவில், இளைஞர் ஒருவர் நீந்தி குளித்ததாகவும், பின் அவர் மாயமானதாகவும், மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வேளச்சேரி, மேடவாக்கம் பகுதி தீயணைப்பு வீரர்கள், நேற்று முன்தினம் இரவு, இளைஞரை தேடத் துவங்கினர்.
பின், நேற்று மதியம் 1:00 மணியளவில், அந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.
மடிப்பாக்கம் போலீசார், இளைஞர் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம் 11வது தெருவைச் சேர்ந்த பிரேம்குமார், 30, என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது.