/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காங்., தலைவர் வீட்டிற்கு குண்டு மிரட்டல்
/
காங்., தலைவர் வீட்டிற்கு குண்டு மிரட்டல்
ADDED : நவ 10, 2025 01:30 AM
குன்றத்துார்: குன்றத்துார் அருகே மணிமங்கலம் ஊராட்சி அம்பேத்கர் தெருவில், தமிழக காங்., தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ.,வுமான செல்வபெருந்தகையின் பூர்வீக வீடு உள்ளது.
இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, நேற்று இரவு மர்ம நபர் மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் உதவியுடன் மணிமங்கலம் போலீசார், இரவு 7:30 மணி முதல் 8:10 மணி வரை தீவிர சோதனை நடத்தினர்.
இதில், மர்ம பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

