/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
108 ஆம்புலன்ஸ்' சேவை தலைமை ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
108 ஆம்புலன்ஸ்' சேவை தலைமை ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்
108 ஆம்புலன்ஸ்' சேவை தலைமை ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்
108 ஆம்புலன்ஸ்' சேவை தலைமை ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்
UPDATED : டிச 28, 2025 09:41 AM
ADDED : டிச 28, 2025 05:10 AM
சென்னை: தேனாம்பேட்டை, 108 ஆம்புலன்ஸ் சேவை தலைமை அலுவலகத்திற்கு, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான தலைமை அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். உடனே, இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த போலீசார், தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில், எந்தவித வெடி பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மொபைல் போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அழைப்பு வந்தது தெரிந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

