/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மாஜி' ராணுவ வீரரை கத்தியால் கீறி வழிப்பறி
/
'மாஜி' ராணுவ வீரரை கத்தியால் கீறி வழிப்பறி
ADDED : டிச 28, 2025 05:12 AM
தாம்பரம்: மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 6வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல், 55. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது, கிண்டியில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில் காவலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.
அம்பேத்கர் சிலை அருகே சென்ற போது, பின்தொடர்ந்து வந்த நான்கு பேர், அவரை வழிமறித்து தாக்கி, சிறிய கத்தியால் கீறி, மொபைல் போனை பறித்து சென்றனர். காயமடைந்த மைக்கேல், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார்.
இது தொடர்பாக, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, விசாரணை நடத்தினர்.
பின், தாம்பரம் எம்.ஆர்.எம்., டாஸ்மாக் கடை அருகே சுற்றித்திரிந்த, சென்ட்ரல் பகுதியை சேர்ந்த வாண்டு என்கிற ரவிபாரதி, 21, கூடுவாஞ்சேரியை சேர்ந்த குமரேசன், 25, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன், 25, ஸ்ரீபெரும்புதுாரை சேர்ந்த முனுசாமி, 25, ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

