/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடிகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
நடிகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 21, 2025 11:07 PM
சென்னை;மயிலாப்பூரில் உள்ள, டி.ஜி.பி., அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் இரவு, 'இ - மெயில்' வந்துள்ளது. அதில், மந்தைவெளியில் உள்ள நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எஸ்.வி.சேகர் வீட்டில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பட்டினப்பாக்கம் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். மர்ம பொருள் ஏதும் சிக்கவில்லை. இதனால், மிரட்டல் வெறும் புரளி என, தெரிய வந்தது.
இதேபோல, கடந்த வாரமும் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போதும் சோதனை நடத்தப்பட்டு, புரளி என, தெரியவந்தது. இரண்டு முறை எஸ்.வி.சேகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக, பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.