/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமான நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல்
/
விமான நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல்
ADDED : ஜூலை 07, 2025 03:36 AM
சென்னை:சென்னை விமான நிலையத்திற்கு, இ - மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள, விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு, நேற்று காலை 10:00- மணி அளவில், இ - மெயில் வந்தது.
அதில், 'சென்னை விமான நிலையத்தில் குண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை வெடித்து சிதறும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
விமான நிலைய இயக்குநர் தலைமையில், பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. அதேநேரம், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையம் முழுதும் சோதனை மேற்கொண்டனர்.
பார்சல்கள் பிரிவு, எரிபொருள் நிரப்பும் இடம், விமான நிலைய வாகன நிறுத்தம் உட்பட, விமான நிலையம் முழுதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மதியம் 1:00 மணி வரை சோதனை நடந்தது.
இதில், வெடிகுண்டு இருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லாததால், இது வழக்கமான புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
விமான நிலைய அதிகாரிகள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், போலி இ - மெயில் வாயிலாக வெளிநாட்டில் இருந்து, மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது.