/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஏப் 19, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
அண்ணா பல்கலை பதிவாளருக்கு, இ-மெயிலில் வாயிலாக நேற்று முன்தினம் காலை, மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், அண்ணா பல்கலையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, அண்ணா பல்கலை அதிகாரி லெனின், கோட்டூர்புரம் ஆய்வாளர் ராமசுந்தரத்தின் வாட்ஸாப் எண்ணில் புகார் அளித்தார். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அண்ணா பல்லைக முழுதும் சோதனை நடந்தது. எந்த வெடி பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிந்து, மிட்டல் விடுத்தவர் யார் என, இ-மெயில் முகவரி அடிப்டையாக வைத்து விசாரித்து வருகின்றனர்.