/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : நவ 07, 2025 02:04 AM
சென்னை: கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு உட்பட எட்டு இடங்களுக்கு நேற்று, மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்தது.
அதில், கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி வீடு, அறிவாலயம், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம், அடையாறு போட் கிளப்பில் உள்ள கலாநிதி வீடு உள்ளிட்ட, எட்டு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன், சம்பவ இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில், எந்தவித வெடிப்பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
மிரட்டல் வந்த இ -மெயில் முகவரியை வைத்து, மிரட்டல் விடுத்தது யார் என, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

