/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வக்கீல்கள் கூட்டுறவு சங்க தேர்தல் 'கெடு' விதித்தது உயர் நீதிமன்றம்
/
வக்கீல்கள் கூட்டுறவு சங்க தேர்தல் 'கெடு' விதித்தது உயர் நீதிமன்றம்
வக்கீல்கள் கூட்டுறவு சங்க தேர்தல் 'கெடு' விதித்தது உயர் நீதிமன்றம்
வக்கீல்கள் கூட்டுறவு சங்க தேர்தல் 'கெடு' விதித்தது உயர் நீதிமன்றம்
ADDED : நவ 07, 2025 02:04 AM
சென்னை: சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வாக்காளர் இறுதிப்பட்டியல் தயாரிப்பு பணியை, நான்கு வாரத்திற்குள் முடிக்க, தேர்தல் அதிகாரி மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில், மானிய விலையில் பெரிய உணவு கூடமும் நடத்தப்படுகிறது.
ஆனால், இந்த கூட்டுறவு சங்கத்தை நிர்வகிக்க, தற்போது நிர்வாகிகள் இல்லை. எனவே சங்கத் தேர்தலை நடத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2018ல் வழக்கறிஞர் வி.ஆனந்த் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சங்கத் தேர்தலை நடத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. இக்குழு, தன் பணியை முடித்த நிலையில், தேர்தல் நடத்தப்படவில்லை.
எனவே, தேர்தலை நடத்தும்படி உத்தரவிட கோரி, வழக்கறிஞர் வி.ஆனந்த் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி மெதுவாக நடப்பதாக, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
சங்கத்தை நிர்வகிப்பவர் புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும். அவருக்கு உதவ வழக்கறிஞர்கள் எல்.சந்திரகுமார், ஆர்.செல்வம், ஆர்.கிருஷ்ணகுமார், திருவேங்கடம், பர்வீன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
கடந்த 2018ல் தேர்தலின் இறுதி பட்டியலை வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும், மனுதாரர் ஆனந்த் தரவேண்டும். அந்த பட்டியலை சங்க நிர்வாகிகள் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, உறுப்பினர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் பார் கவுன்சில் பதிவு அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பணி, பட்டியல் பெற்ற நான்கு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை நவ., 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

