/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ சுரங்கப்பாதை சுவரில் விரிசல் நவீன தொழில்நுட்பத்துடன் சீரமைப்பு
/
மெட்ரோ சுரங்கப்பாதை சுவரில் விரிசல் நவீன தொழில்நுட்பத்துடன் சீரமைப்பு
மெட்ரோ சுரங்கப்பாதை சுவரில் விரிசல் நவீன தொழில்நுட்பத்துடன் சீரமைப்பு
மெட்ரோ சுரங்கப்பாதை சுவரில் விரிசல் நவீன தொழில்நுட்பத்துடன் சீரமைப்பு
ADDED : நவ 07, 2025 02:04 AM
சென்னை: முதல்கட்ட மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை சுவர்களில், சில இடங்களில் லேசான விரிசல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதை சீரமைக்கும் பணியை, வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்களுடன் மேற்கொள்ள, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் தற்போது, விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை- - சென்னை சென்ட்ரல் வரை, 54 கி.மீ., தொலைவுக்கு, தலா நான்கு பெட்டிகள் கொண்ட, 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மெட்ரோ ரயில்களில், தினமும் சராசரியாக மூன்று லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். தற்போது, 55 சதவீதம் சுரங்கப்பாதையில் தான் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் இயக்கம், சுரங்கப்பாதையின் பாதுகாப்பு குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சமீபத்தில் தணிக்கை செய்தது.
அதில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர்களில், சில இடங்களில் லேசான விரிசல் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில் இயக்கம், பாதுகாப்பு குறித்து தணிக்கை செய்தோம். அப்போது, சுரங்கப்பாதையில் உள்ள சுவர்களில், சில இடங்களில் லேசான விரிசல் இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, சென்ட்ரல் - அரசினர் தோட்டம், திருமங்கலம் - ஷெனாய் நகர், வண்ணாரப்பேட்டை - தண்டையார் பகுதிகளில் அடையாளம் கண்டுள்ளோம். இதனால், மெட்ரோ ரயில் இயக்கம், பயணியர் பாதுகாப்பில் எந்த அச்சுறுத்தலும் இல்லை.
மெட்ரோ ரயில்களின் சேவையும் பாதிக்காது. இருப்பினும், இந்த சிறு விரிசல்களையும் சரிசெய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கான தொழில்நுட்பம், தற்போது வரை இந்தியாவில் இல்லை.
எனவே, வெளிநாட்டு நிறுவனத்தின் வல்லுனர்கள் வாயிலாக, நவீன தொழில்நுட்பத்துடன் விரிசல் பகுதிகளை சீரமைக்க உள்ளோம்.
இதற்கான, டெண்டர் வெளியிட்டுள்ளோம். விரைவில் நிறுவனம் தேர்வு செய்து, பணிகளை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

