/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
20 ஆண்டு போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்த கொலையாளி கைது
/
20 ஆண்டு போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்த கொலையாளி கைது
20 ஆண்டு போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்த கொலையாளி கைது
20 ஆண்டு போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்த கொலையாளி கைது
ADDED : நவ 07, 2025 02:05 AM

சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
பட்டினப்பாக்கத்தில், 2001ம் ஆண்டு ரகு என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அப்பன்தாஸ், திலீப் உட்பட, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2003ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கின் விசாரணை முடிவில், அப்பன்தாஸ், திலீப், செந்தில் ஆகிய மூவருக்கும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற ஐந்து பேரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி, ஜாமினில் வெளியே வந்த அப்பன்தாஸ் தலைமறைவானார். அவரை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உட்பட பல்வேறு காவல் குழுக்கள் 20 ஆண்டுகளாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் பகுதியில் அப்பன்தாஸ், 45, பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

