/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் கண்ணில் மண்ணை துாவி மீண்டும் 'ஆட்டோ ரேஸ்'
/
போலீஸ் கண்ணில் மண்ணை துாவி மீண்டும் 'ஆட்டோ ரேஸ்'
ADDED : நவ 07, 2025 02:05 AM
மதுரவாயல்: மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில், மீண்டும் 'ஆட்டோ ரேஸ்' நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில், போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தாம்பரம் வரை நேற்று முன்தினம் இரவு, சிலர் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டனர்.
போரூர் சுங்கச்சாவடியை தாண்டி, அனைவரையும் ஒருங்கிணைத்து ஆட்டோ ரேஸ் நடத்தியுள்ளனர்.
இதையறிந்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தெரிய வந்ததாவது:
அதிக ஆட்டோக்களை ஈடுபடுத்தினால், போலீசாருக்கு தகவல் சென்று விடும் என்பதற்காக, இந்த ரேஸில் மூன்று முதல் நான்கு ஆட்டோக்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆட்டோ பந்தயத்திற்கு 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை, பந்தய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோவை தயார் செய்யும் மெக்கானிக்கில் யார் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், தற்போது இந்த ஆட்டோ ரேஸ் நடத்தி இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில், 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள், இந்த ரேஸை வீடியோ பதிவு செய்துள்ளனர்.
போலீசாரின் கண்ணில் மண்ணைத் துாவி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் நடந்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

