/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தகராறை தட்டிக்கேட்டவரிடம் பணம் பறித்த மூவர் கைது
/
தகராறை தட்டிக்கேட்டவரிடம் பணம் பறித்த மூவர் கைது
ADDED : நவ 07, 2025 02:06 AM

கொடுங்கையூர்: தகராறை தட்டிக் கேட்ட கார்பென்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.
கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ராஜேஷ், 22; கார்பென்டர். இரு தினங்களுக்கு முன், வீட்டின் வெளியே நின்று, தன் தாயுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நான்கு பேர், வேறொரு நபருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதை பார்த்த ராஜேஷ், அங்கு சென்று நால்வரையும் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த அந்த கும்பல், அவரை அவதுாறாக பேசி தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன் மற்றும் 2,000 ரூபாயை பறித்து தப்பியது.
கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, பணம் பறிப்பில் ஈடுபட்ட கொடுங்கையூரைச் சேர்ந்த ஜெயசந்திரன், 20, மனோஜ், 23, அபினேஷ், 21, ஆகிய மூவரையும், நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பின், மூவரையும் சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவான மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

