/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஞ்சியில் 'தங்க பல்லி' மாயமாகி இருந்தால் நடவடிக்கை: சேகர்பாபு
/
காஞ்சியில் 'தங்க பல்லி' மாயமாகி இருந்தால் நடவடிக்கை: சேகர்பாபு
காஞ்சியில் 'தங்க பல்லி' மாயமாகி இருந்தால் நடவடிக்கை: சேகர்பாபு
காஞ்சியில் 'தங்க பல்லி' மாயமாகி இருந்தால் நடவடிக்கை: சேகர்பாபு
ADDED : நவ 07, 2025 02:06 AM
சென்னை: ''காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தங்க பல்லி மாயமனதாக வந்துள்ள புகாரில் உண்மை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தங்க பல்லி மாயமனதாகவும், பழைமை வாய்ந்த பல்லி சிலையை மாற்ற முயற்சி நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கோவிலில் ஆய்வு நடத்தினர். 'கோவிலில் தங்க பல்லி என்பதே இல்லை' என, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொளத்துார் பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி புதிய கட்டட பணியை நேற்று ஆய்வு செய்தபின், சேகர்பாபு அவர் கூறியதாவது:
கொளத்துார் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 800 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். கல்லுாரிக்கான நிரந்தர கட்டட பணி நடந்து வருகிறது, வரும் கல்வியாண்டில், புதிய கட்டடத்தில் கல்லுாரி செயல்படும். அடுத்த கட்டமாக, 2,500 பேர் படிக்கும் வகையில் கல்லுாரி மேம்படுத்தப்படும்.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க பல்லி காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. புகாரில் உண்மை இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுகுறித்த விளக்கத்தை, காஞ்சி மண்டல இணை கமிஷனர் அறிக்கையாக அளிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

