/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் இந்திய அணியினர் ஆதிக்கம்
/
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் இந்திய அணியினர் ஆதிக்கம்
ADDED : நவ 07, 2025 02:07 AM

சென்னை: சென்னையில் நடந்து வரும் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்திய தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில், 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
இதில், 20க்கும் அதிகமான ஆசிய நாடுகளைச் சேர்ந்த, 35 வயது முதல் 100 வயது வரை உள்ள, 3,200க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர், 14 பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர்.
ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை ஓட்டம் உட்பட, அனைத்து டிராக் போட்டிகளும் இடம் பெற்றுள்ளன. 75 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், தமிழகத்தின் நட்சத்திரங்களான சாமுவேல், 85 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சுப்பிரமணி ஆகியோர், இந்திய அணியில் இடம்பெற்று அசத்தி வருகின்றனர்.
நேற்று நடந்த முதல் நாள் போட்டிகளில், இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர் - வீராங்கனையர் பதக்க வேட்டையைத் துவங்கினர். முதல் நாள் முடிவில், இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆடவருக்கான 75 வயதுக்கு மேற்பட்டோர் 'ட்ரிபிள் ஜம்ப்' போட்டியில், தமிழகத்தின் சாமுவேல் வெள்ளிப் பதக்கமும், ஆடவருக்கான 75 வயதுக்கு மேற்பட்டோர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளார்.

