/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உயர் நீதிமன்றம், சுங்க இல்ல தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
உயர் நீதிமன்றம், சுங்க இல்ல தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
உயர் நீதிமன்றம், சுங்க இல்ல தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
உயர் நீதிமன்றம், சுங்க இல்ல தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 20, 2025 04:07 AM

வடக்கு கடற்கரை, சென்னை உயர் நீதிமன்றம், மத்திய சுங்க இல்ல தலைமை அலுவலகத்துக்கு, மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால், பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், சென்னை உயர் நீதிமன்றத்தின் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்றங்களில் 6 ஆர்.டி.எக்ஸ்., வகை வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு கருதி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என நுாற்றுக்கணக்கானோர், நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றங்கள் முழுதும் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில், அபாயகரமான எந்த பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
அதேபோல, சென்னையில், உள்ள மத்திய சுங்க இல்ல தலைமை அலுவலகத்துக்கு, நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் சந்தேகப்படும் வகையில், எந்த பொருளும் சிக்கவில்லை. மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
எனினும், நீதிமன்றம், சுங்க அலுவலகத்திற்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.