/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 15, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலக இ - மெயிலுக்கு, நேற்று காலை மெயில் ஒன்று வந்தது.
அதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடுகள், போரூரில் உள்ள ஆல்பா பள்ளி, கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் அலுவலகம் ஆகிய நான்கு இடங்களில், வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். எந்தவித வெடி பொருட்களும் சிக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.