/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆயிரம் விளக்கு மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
ஆயிரம் விளக்கு மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 19, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை விமான நிலைய அலுவலகத்திற்கு, நேற்று காலை, 10:55 மணியளவில், 'இ-மெயில்' ஒன்று வந்தது. அதில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பாசி ஆசூர்கானா மசூதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அண்ணாசாலை ஆய்வாளர் மோகன்தாசுக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பாண்டியன் உதவியுடன் மசூதி முழுதும் சோதனை நடத்தினர்.
ஒரு மணி நேரம் நடந்த சோதனையில், வெடி பொருட்கள் ஏதும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அண்ணாசாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

