/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
12 நாடுகளின் துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
12 நாடுகளின் துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 16, 2025 12:31 AM
சென்னை: மயிலாப்பூரில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை இ - மெயில் வந்துள்ளது. அதில், சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள, ஜெர்மன் துாதரகம், மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ரஷ்ய துாதரகம் உட்பட, சென்னையில் உள்ள 12 நாடுகளின் துாதரக அலுவலகங்களுக்கும், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வீட்டிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடங்களில், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய தீவிர சோதனையில், வெடி பொருட்கள் ஏதும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.