/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 தெருக்களில் 15 மணிநேரம் தொடர் மின்தடை
/
5 தெருக்களில் 15 மணிநேரம் தொடர் மின்தடை
ADDED : அக் 16, 2025 12:31 AM
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை, கருணாநிதி நகரில் 1 முதல் 5 தெருக்கள் உள்ளன.
இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மின் தடை ஏற்பட்டது.
இது குறித்து, பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
மின் வாரிய அதிகாரிகளின் ஆய்வில், தண்டையார்பேட்டை, எண்ணுார் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயில், மாநகராட்சி பூங்கா அமைக்கும் பணிக்காக, 'பொக்லைன்' இயந்திரம் மூலம் பணியில் ஈடுபட்டிருந்தபோது புதை மின் வடம் சேதமடைந்துள்ளது.
இதனால், ஐந்து தெருகளுக்கும் 15 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.