/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச ஸ்கேட்டிங் வீரருக்கு பாராட்டு விழா
/
சர்வதேச ஸ்கேட்டிங் வீரருக்கு பாராட்டு விழா
ADDED : அக் 16, 2025 12:30 AM

சென்னை: சர்வதேச இன்லைன் வேக 'ஸ்கேட்டிங்' வீரர் ஆனந்தகுமார் வேல்குமாரை கவுரவிக்கும் வகையில், அவர் படித்த கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில், நேற்று பாராட்டு விழா நடந்தது.
சமீபத்தில், சீனாவில் நடந்த சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில், இந்தியாவின் சார்பாக பங்கேற்ற ஆனந்தகுமார் வேல்குமார், முதல் இடம்பிடித்து தங்கம் வென்றார்.
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், விழாவிற்கு தலைமை விருந்தினராக பங்கேற்ற, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்யா மிஸ்ரா மற்றும் பத்மா சேஷாத்ரி பள்ளியின் தலைவரும், இயக்குநருமான ஷீலா ராஜேந்திரா ஆகியோர் இணைந்து, ஆனந்தகுமார் வேல்குமாருக்கு நினைவுப் பரிசை வழங்கினர்.
நாட்டின் முதல் உலக ஸ்கேட்டிங் வீரரான ஆனந்தகுமார் வேல்குமார், கூறுகையில், ''பள்ளியில் துவங்கும் கனவுகள், உலக மேடையிலும் நனவாகலாம். இப்பள்ளியில் படிக்கும்போது, பள்ளி எனக்கு அளித்த ஆதரவுக்கும், பயிற்சிக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன்'' என்றார்.