/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் குடியிருப்பில் நாய்கள் அடித்து கொலை?
/
போலீஸ் குடியிருப்பில் நாய்கள் அடித்து கொலை?
ADDED : அக் 16, 2025 12:29 AM
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில், ஒரு தம்பதி நாய்களை கொடூரமாக அடித்து கொன்று வருவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அய்யப்பன்தாங்கல், சாய் ராம் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 25; விலங்குகள் நல ஆர்வலர். இவர், நேற்று மாலை கீழ்ப்பாக்கம் போலீல் அளித்த புகார்:
கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம், கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் வசிக்கும் பெண் போலீஸ் ஷீபா மற்றும் அவரது கணவர், நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகளை சித்ரவதை செய்து, அடித்துக் கொன்று அப்புறப்படுத்தி வருகின்றனர்.
ஐந்துக்கும் மேற்பட்ட நாய்களை அடித்து கொலை செய்துள்ளனர். அதற்கான வீடியோ ஆதாரங்களையும் இணைத்தாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து, விக்னேஷ் கூறுகையில், ''கடிக்கும் நாய்கள் மீது தாக்கினால் ஏற்றுக் கொள்ளலாம்; சாலையோரங்களில் படுத்திருக்கும் நாய்களை கண்டறிந்து, கொடூரமாக தாக்கி, கொலை செய்துள்ளனர்.
'' தேதி வாரியாக அடித்து கொன்ற வீடியோ காட்சி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளேன்,'' என்றார்.