/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புத்தக காட்சி - தாமரை பிரதர்ஸ் வெளியீடு
/
புத்தக காட்சி - தாமரை பிரதர்ஸ் வெளியீடு
ADDED : ஜன 12, 2025 12:14 AM

புலவர் புராணம்
ஆசிரியர்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
பக்கம்: 996, விலை: ரூ.1,500 - சலுகை விலை ரூ.1,200
பத்தொன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த ஞானியர் பெருமக்களுள் ஒருவர் வண்ணச்சரபம் சுவாமிகள். இவர், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் இன்று, 50 ஆயிரத்திற்கு சற்று அதிகமான பாடல்களே கிடைத்துள்ளன. இவை அனைத்தையும் அச்சிடுவதில் தாமரை பிரதர்ஸ் பதிப்பகம் ஈடுபட்டுள்ளது. அதன் முதல் பகுதியாக, புலவர் புராணம் வெளியாகியுள்ளது. மொத்தம் 3,0000 பாடல்களில் தமிழின் தலைசிறந்த புலவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என மொத்தம் 70க்கும் மேற்பட்டோரின் வரலாற்றைக் கூறுவது இந்நுால். இந்நுால் இயற்றப்பட்டு 128 ஆண்டுகளுக்குப் பின், முழு உரையோடு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தமிழனின் இல்லத்திலும் இருக்க வேண்டிய நுால்.
-
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கோவை, அந்தாதி பகுதி - 1
ஆசிரியர்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
பக்கம்: 2,153, விலை: ரூ.2,910 - சலுகை விலை ரூ.2,400
வண்ணச்சரபம் சுவாமிகள் இயற்றிய ஐந்து கோவைகள் அடங்கிய ஒரு நுாலும், 57 அந்தாதிகள் அடங்கிய ஐந்து நுால்களும் தனித்தனியாக வெளியாகியுள்ளன. இதுநாள் வரை, ஓலைச்சுவடிகளில் இருந்த 11 நுால்கள், இந்த ஆறு நுால்களிலும் சேர்க்கப்பட்டு அச்சேறியுள்ளன. இந்த ஆறு நுால்களிலும் மொத்தம் 5,691 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 19ம் நுாற்றாண்டுத் தமிழகத்தின் நிலையை அறிந்து கொள்ள இந்த நுால்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழ் ஆய்வு மாணவர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், முருக பக்தர்கள், கவுமார அடியார்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் இருக்க வேண்டிய நுால்கள் இவை.

