
பறவைகளைப் பாடுவோம்
தொகுப்பாசிரியர்: மலர்விழி, பலராமன்
பக்கம்: 104 விலை: ரூ.110
வெளியீடு: காக்கைக்கூடு
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பறவைகளின் அழகை சிறுவர்கள் உணரும் வகையிலும் பாரதி, நாமக்கல் கவிஞர், கவிமணி, பாரதிதாசன், வாணிதாசன், முடியரசன், அழ.வள்ளியப்பா, வயலுார் சண்முகம் உள்ளிட்டோர் எழுதிய கவிதைகள் உள்ளன.
பனையடி
ஆசிரியர்: ரா.செல்வம் ஐ.ஏ.எஸ்.,
பக்கம்: 208 விலை: ரூ. 200
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அரசுப்பள்ளியின் மண்தரையில் படிக்கும் சராசரி மாணவன் தமிழ். தன் கால் முடக்கிய அவமானங்கள், துயர்களை உதறி, 'கரைக்குள் காட்டாறு அடங்க வேண்டியதில்லை' என்ற ஒற்றை வரியைப்பற்றி மேலெழும் கதை. துவளும் இளைஞர்கள் படிக்க வேண்டிய நாவல்.
---இன்னும் இசையுண்டு
இந்த வீணையில்
ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்
பக்கம்: 194 விலை: ரூ.230
வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்
நவீன கவிஞர்களின் வரிசையில் முன்பக்கத்தில் இடம்பெறும் மூத்த கவிஞர், ஈரோடு தமிழன்பன். இடைவிடாமல் கவிதைகளில் இயங்குகிறார் என்பதற்கு, 'குழந்தையிடம் பழக வரும் சொல் மலரின் இதழோடு பழக வரும் அழகைப்போல' என்பதில் அறியலாம். இப்படி நிறைய...

