ADDED : நவ 08, 2025 02:51 AM

தரமணி: தனிநாயகம் அடிகளார் எழுதிய 'பழந்தமிழ் இலக்கியங்களில் கல்வி சிந்தனைகள்' நுால் வெளியிடப்பட்டது.
தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பியர் ஆய்வு இருக்கை வெளியிட்டுள்ள, பேராசிரியர் எஸ்.தனிநாயகம் அடிகளாரின் 'பழந்தமிழ் இலக்கியங்களில் கல்விச் சிந்தனைகள்' நுாலை, அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்.
பின் அவர் பேசியதாவது:
பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் எழுதிய 'பழந்தமிழ் இலக்கியங்களில் கல்வி சிந்தனைகள்' நுால், சாதாரண ஆய்வுகள் இல்லை. பண்டைய தமிழர் நாகரிகத்தின் கல்வி மரபையும் அதன் சமத்துவ பண்புகளையும், உலகம் முழுதும் எடுத்து சொல்லும் வரலாற்று சான்று.
இந்நுால், லண்டன் பல்கலைகழகத்தில், முனைவர் பட்டத்திற்காக மேற்கொண்ட 'எஜுகேசன் தாட் இன் ஏன்சியன்ட் தமிழ் லிட்ரேட்சர்' எனும் ஆங்கில ஆய்வின் தமிழ் வடிவம் ஆகும். இதை தமிழாக்கம் செய்த பேராசிரியர் மனோகரன் பாராட்டுக்குரியவர்.
இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் அமுதவல்லி, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், இயக்குநர் கோபிநாத் ஸ்டாலின் உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.

