/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ - சேவை மையமா; பொது கழிப்பறையா? கோடம்பாக்கம் மண்டல ஆபீசில் அவலம்
/
இ - சேவை மையமா; பொது கழிப்பறையா? கோடம்பாக்கம் மண்டல ஆபீசில் அவலம்
இ - சேவை மையமா; பொது கழிப்பறையா? கோடம்பாக்கம் மண்டல ஆபீசில் அவலம்
இ - சேவை மையமா; பொது கழிப்பறையா? கோடம்பாக்கம் மண்டல ஆபீசில் அவலம்
ADDED : நவ 08, 2025 02:50 AM

கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் உள்ள 'இ - சேவை' மையத்தில், உள்ளே நுழைய முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், இ - சேவை மையமா அல்லது பொது கழிப்பறையா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'கப் தாங்க' முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோடம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் சாலையில் கோடம்பாக்கம் மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில், அரசு இ - சேவை மையம் அமைந்துள்ளது.
இங்கு, பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க, தினமும் 50க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இதனால், தகர ஷெட்டால் அமைக்கப்பட்டுள்ள இந்த 'இ - சேவை' மையத்தை ஒட்டி, சிலர் சிறுநீர் கழிப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், இ - சேவை மையத்திற்குள் வரும் பயனாளிகள், மாஸ்க் அணிந்தும், மூக்கை பிடித்தபடி நிற்கும் அவல நிலை உள்ளது.
பொதுமக்களுக்கான கழிப்பறையும், இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. அதுவும் பயன்படுத்த முடியாத வகையில் படுமோசமாக உள்ளது.
அத்துடன், இ - சேவை மையத்தை ஒட்டி, தேவையற்ற பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அங்கே சிலர் மது அருந்தி, பாட்டில்களையும் விட்டு சென்றுள்ளனர்.
பொதுமக்கள் தினசரி வந்து செல்லும், சென்னையின் மத்திய பகுதியில் உள்ள அலுவலகத்தின் நிலைமையே படுமோசமாக உள்ளது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

