/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னையில் வழிப்பறி ஒரே நாளில் 10 பேர் கைது
/
வடசென்னையில் வழிப்பறி ஒரே நாளில் 10 பேர் கைது
ADDED : நவ 08, 2025 02:49 AM

சென்னை: வடசென்னையில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று ஒரே நாளில், பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருபவர் வெங்கடேசன், 54. இவரை தாக்கிவிட்டு நேற்று, 1,000 ரூபாய் பறித்து சென்ற கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய், 23, ராஜ்குமார், 22, ஆகியோரை, ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர்
காசிமேடு, சிங்காரவேலன் நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 38; மீனவர். இவர், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் சென்றபோது, கத்திமுனையில் 500 ரூபாய் பறித்து தப்பிய, இந்திரா நகரைச் சேர்ந்த பிரதாப், 19 என்பவரை, மீன்பிடி துறைமுகம் போலீசார் கைது செய்தனர்
வியாசர்பாடி, தாமோதரன் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விஜி, 37, முல்லை நகர் அருகே சென்று கொண்டிருந்தார், அவர் பணம் தர மறுத்ததால், கல்லால் மண்டையை உடைத்த, வியாசர்பாடியைச் சேர்ந்த அஜித், 29, சூர்யபிரகாஷ், 33, ஆகியோரை, எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்
புளியந்தோப்பு, பேசின் சாலையை சேர்ந்தவர் முருகன், 30. இவர், நேற்று அதிகாலை கன்னிகாபுரம் கஸ்துாரிபாய் காலனி அருகே, பால் பாக்கெட் வினியோகம் செய்தபோது வழித்து, 1,500 ரூபாய் பறித்து சென்ற, பிரகாஷ் மற்றும் இரண்டு திருநங்கையரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோயம்பேடு அண்ணா தெருவில், முட்டை வியாபாரம் செய்பவர் பார்த்திபன், 23. இவரை வழிமறித்து பீர் பாட்டிலால் தாக்கி, 1,200 ரூபாயை பறித்து சென்றனர். கோயம்பேடு போலீசார் விசரித்து, கோயம்பேடு சேமாத்தம்மன் நகரைச் சேர்ந்த விக்னேஷ், 21, துரைமுருகன், 28, ஆகியோரை கைது செய்தனர்.

