sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புத்தகக் காட்சி 'விவாகரத்து நடக்காமல் இருக்க திருக்குறள் படித்தால் போதும்'

/

புத்தகக் காட்சி 'விவாகரத்து நடக்காமல் இருக்க திருக்குறள் படித்தால் போதும்'

புத்தகக் காட்சி 'விவாகரத்து நடக்காமல் இருக்க திருக்குறள் படித்தால் போதும்'

புத்தகக் காட்சி 'விவாகரத்து நடக்காமல் இருக்க திருக்குறள் படித்தால் போதும்'


ADDED : ஜன 19, 2024 12:11 AM

Google News

ADDED : ஜன 19, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை புத்தகக் காட்சியில் 'திருக்குறளோடு நாம்' தலைப்பில், பா.தாமோதரன் பேசியதாவது:

திருக்குறளைவிட சிறந்த வாழ்வியல் நுால் எதுவும் இல்லை என்பதை, உணர்ந்து பார்த்தால்தான் தெரிய வரும்.

வள்ளுவர் சுயநலத்திற்காக எதையும் எழுதவில்லை. வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும், ஒரு திருக்குறள் நம்மோடு வந்துபோகும்.

சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு இந்த உலகம் இன்பவியல். புலம்புகிறவர்களுக்கோ துன்பவியல் என்கிறார் வள்ளுவர்.

துன்பம் வரும்போது கலங்காமல் இருந்தால், அந்தத் துன்பமே துன்பம் அடைந்து நம்மிடமிருந்து நீங்கிவிடும் என, குறள் எண்: 623 உரைக்கிறது.

ஆங்கிலம் அன்னியர் மொழி. எனவே, அதை தவறாகப் பேசுவதில் தவறில்லை என்ற தைரியம் வந்துவிட்டால், அந்த மொழி நாளடைவில் உங்கள் நாவிற்கு வசப்பட்டுவிடும்.

இதைத்தான் குறள்: 596 கூறுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கணவன் - மனைவி இடையிலான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க எட்டு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. கூட்டம் நிரம்பி வழிகிறது.

இங்கு வரும் தம்பதியர், திருக்குறளின் காமத்துப் பால் படித்தால், நீதிமன்றம் வந்திருக்க மாட்டார்கள்.

இணையற்ற ஜோடியராக மாறியிருப்பர்.

கல்விக்கும் அறிவிற்கும் தொடர்பில்லை. பழக்கமே ஒருவித பழக்கம்தான், மனதிற்கு வயதே கிடையாது, தோல்வியை ஏற்றுக்கொள்வதே உண்மையான வீரம், சிறுமைப் புத்தி உள்ளவனே மற்றவரைக் குறை கூறுவான் என, வள்ளுவம் கூறும் ஒவ்வொரு குறளும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை.

திருக்குறளை உணர்ந்து படித்தால், ஜாதி இருக்காது, மதம் இருக்காது, வீடுகளுக்கு இடையே சுவர் இருக்காது. இலக்கிய அறிஞர்களின் 'ரியல் ஹூரோ' வள்ளுவர்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us