தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புத்தக காட்சி - நுால் அறிமுகம்

புத்தக காட்சி - நுால் அறிமுகம்

புத்தக காட்சி - நுால் அறிமுகம்


ADDED : ஜன 11, 2025 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 12:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்த 15 நாட்கள்

சுதந்திர பாரதம் பிறக்கும் தருணத்தில்…

ஆசிரியர்: பிரசாந்த் போள்

பக்கம்: 168, விலை: ரூ. 200.

வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம்

-நாடு சுதந்திரம் பெறுவதற்கு 15 நாள் முன், நாட்டின் கிழக்கிலும், மேற்கிலும் நடந்த வன்முறைகள், படுகொலைகள், பேரழிவுகள் பற்றிய வரலாற்று உண்மைகளை பேசுகிறது இந்நுால். ஆக., 15ல் காங்., தலைவர்கள் பதவியை எதிர்பார்த்து, டில்லிக்கு படையெடுத்துச் சென்றது உட்பட பல தகவல்களை சேர்த்துள்ளது.

பிருதிவிராஜனின் குதிரை

ஆசிரியர்: மனோஜ் தாஸ்

தமிழில்: இளம்பாரதி

பக்கம்: 184, விலை: ரூ.220

வெளியீடு: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்

ஒடிசா, ஆங்கிலம் மொழிகளில் எழுதி புகழ்பெற்றவர் மனோஜ் தாஸ். பத்ம பூஷண் மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்ற இவர், சிறுகதை, நாவல், பயண நுால், கவிதை, வரலாறு என பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இதில், பிருதிவிராஜனின் குதிரை, ஆந்தை, இலக்கு, சிலை சிதைப்பவர்கள் வருகிறார்கள் உள்ளிட்ட சிறுகதைகளை சுவாரஸ்யத்துடன், வரலாறு துணுக்குகளை கோர்த்து வழங்கியுள்ளார். இளம்பாரதியின் மொழிபெயர்ப்பு நன்று.

-கீழாநிலைக்கோட்டைக் கிளிகள்

ஆசிரியர்: தாமரை ஹரிபாபு

பக்கம்: 286, விலை: ரூ. 300

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

-மகப்பேறு மருத்துவரான டாக்டர் தாமரை ஹரிபாபு எழுதியுள்ள சரித்திர நாவலான இது, 1545, மே 21ல் துவங்குகிறது. கதை, கோட்டை, கொத்தளங்களில் நுழைந்து, சேர, சோழ, பாண்டிய நாடுகளில் பயணித்து, இலங்கை, மலேசியாவுக்கும் சென்று, சமயம், தத்துவம் உள்ளிட்டவற்றை அலசுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us