/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புத்தக காட்சி - வாசிப்பு இதயத்தை மகிழ்விக்கும் - கிருங்கை சேதுபதி
/
புத்தக காட்சி - வாசிப்பு இதயத்தை மகிழ்விக்கும் - கிருங்கை சேதுபதி
புத்தக காட்சி - வாசிப்பு இதயத்தை மகிழ்விக்கும் - கிருங்கை சேதுபதி
புத்தக காட்சி - வாசிப்பு இதயத்தை மகிழ்விக்கும் - கிருங்கை சேதுபதி
ADDED : ஜன 05, 2025 09:53 PM
புத்தக காட்சி வெளி அரங்கில் 'வாசிப்பால் உயர்ந்தவர்கள்' என்ற தலைப்பில் கிருங்கை சேதுபதி பேசியதாவது:
எழுத்து என்பது எக்காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும். வாசிப்பு, ஆன்மாவோடு உரையாட வேண்டும். முந்தைய தலைமுறை வாசிப்பின் தலைமுறையாக இருந்தது. இத்தலைமுறை அதிலிருந்து விலகி உள்ளது.
அன்று, படிக்க தெரியாத அம்மாக்கள், அப்பாக்கள், கிழே கிடக்கும் எழுத்துள்ள சிறு காகிதங்களையும் எடுத்து கண்ணில் ஒற்றிக்கொள்வார்கள். ஆனால் இன்று, கல்வி அறிவை பெற்ற நாம், காகிதங்களை மிதித்து சாதாரணமாக கடக்கிறோம்.
மேலும், வாசித்து கடப்பதல்ல வாசிப்பு. வாசிப்பு என்பது உள்வாங்கி கொள்வது. வாசிப்பு வாழ்க்கையை உயர்த்தும். வாசிப்பு, எழுத்துக்கும், அறிவுக்கும் பாலம்.
நல்ல புத்தகங்கள், நம் சுமைகளை இறக்கி வைக்கும் சுமை தாங்கிகளாகவும், இதயத்திற்கு மகிழ்ச்சியையும் தரவல்லவை.
அரங்கநாதன் அடிகளார், குன்னக்குடி அடிகளார் போன்று இன்னும் பிற மகான்கள் வாசிப்பை உள்வாங்கியதால் தான், உயர்ந்த நிலை அடைந்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.