தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போரூர் ராமச்சந்திரா பல்கலை தின விழா ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவம்

 போரூர் ராமச்சந்திரா பல்கலை தின விழா ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவம்

 போரூர் ராமச்சந்திரா பல்கலை தின விழா ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவம்


ADDED : செப் 19, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போரூர்: போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடந்த பல்கலை தின விழாவில், மாணவ -- மாணவியர் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.

போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் பிறந்தநாள் மற்றும் பல்கலை தின விழா, மருத்துவமனை வளாக அரங்கில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில், படிப்பில் சிறந்து விளங்கும் 28 மாணவ -- மாணவியருக்கு 38 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சிறப்பான இடம் பிடித்த அபிநயா என்ற மாணவிக்கு, நான்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தவிர, நிறுவனத்தில் 10 முதல் 40 ஆண்டுகள் பணியாற்றிய 282 ஊழியர்களுக்கு, விருதுகள் மற்றும் தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன.

ராமச்சந்திரா மருத்துவக் கல்லுாரி தலைவரும், பொது அறுவை சிகிச்சை துறை பேராசிரியருமான பாலாஜி சிங் மற்றும் கதிரியக்கவியல் துறை பேராசிரியர் ராய் சந்தோஷம் ஆகியோருக்கு, 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது.

முடநீக்கியல், முதுகெலும்பு அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் கண்ணன் கார்த்திக் கைலாஷுக்கு, 'மாணவர் வழிகாட்டி' விருது வழங்கப்பட்டது.

நிகழ்வின் ஒரு பகுதியாக, நிறுவன வேந்தர் வெங்கடாசலம், 'சஹாயா' எனும் நோயாளிகளின் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிப்பதற்கான துறையை தொடங்கி வைத்தார்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்கு தொடர் மருத்துவ ஆலோசனை, இயன்முறை சிகிச்சை, ஆய்வக பரிசோதனை உள்ளிட்ட பல சேவைகளை ஒருங்கிணைத்து வழங்குவதற்காக, இப்புதிய துறை தொடங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us