ADDED : அக் 06, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள, 'டாஸ்மாக்' கடை அருகே, கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், ஒடிசாவில் இருந்து, தன் சகோதரருடன் சேர்ந்து கஞ்சா வாங்கி வந்து, சென்னையில் விற்று வருவது தெரிந்தது.
அவனிடம் இருந்து 127 போதை மாத்திரைகள், 4 கிலோ கஞ்சா மற்றும் 450 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் நேற்று சேர்த்தனர். அவரது சகோதரரை தேடி வருகின்றனர்.