ADDED : அக் 06, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: போலீஸ் எஸ்.ஐ.,யை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருபவர் குமார், 35. இவர், நேற்று முன்தினம் இரவு, அருணாச்சலம் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது தெரு நாய் ஒன்று குமாரை துரத்திச்சென்று காலை கடித்து குதறியது. இதனால், பலத்த காயமடைந்த அவர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.