ADDED : நவ 05, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மயிலாப்பூர், காரணீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஷாம், 20. இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.
பின் படத்திற்கு சென்ற அவரது அண்ணன் கமலேஷ், சினிமா பார்த்துவிட்டு வந்தபோது, தம்பியின் இருசக்கர வாகனம் திருடு போனதை கண்டறிந்தார். இதுகுறித்து சகோதாரர் இருவரும், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, நொச்சிநகர் பகுதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவரது இருசக்கர வாகனத்தை சிறுவன் ஒருவன் வைத்துக்கொண்டு நின்றிருப்பதை பார்த்தனர். சிறுவனை கையும் களவுமாக பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், மதுரவாயல், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.