/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காத்தாடிக்காக ரயில் மீது ஏறிய சிறுவன்: மின்சாரம் பாய்ந்து 'சீரியஸ்'

ADDED : டிச 31, 2025 05:17 AM

கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டையில், ரயில் மீது ஏறி காத்தாடி எடுக்க முயன்ற சிறுவன், மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார்.
வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், 50வது பிளாக்கைச் சேர்ந்தவர் இளம்பரிதி. இவரது மகன் இம்மானுவேல், 12. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார்.
சிறுவன் இம்மானுவேல், வியாசர்பாடி, ரயில்வே 'கூட்ஸ் செட்' பகுதியில், தன் நண்பர்களுடன் நேற்று காத்தாடி விட்டு விளையாடினார்.
அப்போது, கூட்ஸ் ரயிலின் உயர் மின்னழுத்த கம்பியில் மாட்டிக்கொண்ட காத்தாடியை எடுக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். இதில், 55 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இம்மானுவேல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.