/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
8வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை
/
8வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை
ADDED : மார் 06, 2024 12:22 AM
பல்லாவரம், பல்லாவரத்தில், தாய் கண்டித்ததால், மனமுடைந்த மகன், எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, 'ஒலிம்பியா கிராண்ட்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வருபவர் சீனிவாச கிருஷ்ண குமார். மென் பொறியாளர். இவரது மனைவி சைனஜா. இவர்களது மகன் ஸ்ரீராம், 14.
பல்லாவரம் தனியார் பள்ளியில், ஸ்ரீராம் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீராம், தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தி வந்ததையும், சரியாக படிக்கவில்லை என்றும், அவரது தாய் சைனஜா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ஸ்ரீராம், அனைவரும் துாங்கிய பின் நள்ளிரவு 12:30 மணிக்கு, எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில், பலத்த காயமடைந்த சிறுவனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

