/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது பைக் ஓட்டிய சிறுவன் பலி 2 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை
/
பொது பைக் ஓட்டிய சிறுவன் பலி 2 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை
பொது பைக் ஓட்டிய சிறுவன் பலி 2 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை
பொது பைக் ஓட்டிய சிறுவன் பலி 2 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை
ADDED : மே 13, 2025 12:50 AM
பூந்தமல்லி :பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் மகன் பிரியன், 13. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
கலைவாணன் வெளியூர் சென்றிருந்த நிலையில், பிரியன் தந்தையின், 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கை எடுத்துக்கொண்டு, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான கார்த்திகேயன், 10, முகிலன், 10, ஆகியோரை ஏற்றி கொண்டு, நேற்று ஊர் சுற்றியுள்ளார்.
மீஞ்சூர் - -வண்டலுார் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி அருகே மலையம்பாக்கம் பகுதியில் பைக்கில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலைத்தடுமாறி தடுப்பில் மோதி கீழே விழுந்ததில், மூவரும் பலத்த காயமடைந்தனர்.
அந்த பகுதியில் சென்றவர்கள், மூவரையும் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் பிரியன் இறந்தது தெரிய வந்தது.
கார்த்திகேயன், முகிலன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.