ADDED : அக் 08, 2024 12:11 AM

அ நிறம் | அளவு
திருப்போரூர், திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர், ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்.
இவரது மகன் துரைராஜ், 7; மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். அப்பகுதியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் தோண்டப்பட்ட புதிய குளம் உள்ளது. அந்த குளத்தில், சிறுவன் துரைராஜ் குளிக்க இறங்கிஉள்ளார்.
எதிர்பாராமல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். தாழம்பூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
